Skip to content

உங்கள் நிறுவனம்

உங்கள் நிறுவனம் People Intouch B.V. (‘நாங்கள்’, ‘எங்கள்’, ‘எங்களுடைய’) உருவாக்கிய SpeakUp® தொடர்பாடல் கருவியை உங்களுக்குக் கிடைக்கும்படி தேர்வுசெய்துள்ளது.

People Intouch B.V. ஆனது ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உள்ள நெதர்லாந்தைத் தளமாகக் கொண்டது. எனவே நாங்கள் உலகின் மிக விரிவான தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஒழுங்கு விதிகளில் ஒன்றான EU GDPR (பொதுத் தரவுப் பாதுகாப்பு ஒழுங்கு விதி)-யை ஏற்றுக்கொண்டுள்ளோம்.

இந்தத் தனியுரிமை அறிக்கையானது நீங்கள் உங்கள் நிறுவனத்துடன் தொடர்பாடலை மேற்கொள்வதற்கு SpeakUp®ஐப் பயன்படுத்தும் போது உங்களுக்குப் பொருந்தும்.

SpeakUp® அறிமுகம்

SpeakUp® வாயிலாக நீங்கள் ஒரு புகாரை விட்டுச்சென்று அதன்பின் உங்கள் நிறுவனத்துடன் SpeakUp® சூழலுக்குள் பத்திரமான, பாதுகாப்பான உரையாடலைத் தொடங்க முடியும்.

உங்கள் நிறுவனமானது SpeakUp® ஊடாக உங்களுடைய தனிப்பட்ட தரவைச் செயன்முறைப்படுத்துவதற்குப் பொறுப்பாகும். மேலும், அது தரவுக் கட்டுப்பாட்டாளராகவும் செயற்படும். SpeakUp® தொடர்பாக அல்லது உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு செயன்முறைப்படுத்தப்படும் என்பது குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், உங்கள் நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது அவர்களின் SpeakUp கொள்கை மற்றும்/அல்லது தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும். People Intouch என்பது தரவுச் செயலியாகும். அந்தப் பாத்திரத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். உங்கள் நிறுவனத்துடன் தொடர்புகொள்வதற்கான சிறந்த பாதுகாப்பான வழியை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் என்பதே இதன் அர்த்தமாகும்.

உங்கள் அந்தரங்கம் எங்களுக்கு முக்கியமானதாகும். SpeakUp® ஐப் பயன்படுத்தும்போது நீங்கள் பாதுகாப்பாக உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அத்துடன் பின்வருவனவற்றையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்:

உணர்ச்சிவயப்படுத்தும் தகவல்கள்

SpeakUp® ஆனது இனம், சுகாதாரத் தரவு, அரசியல் கண்ணோட்டங்கள், தத்துவ ஞானம் சார்ந்த நம்பிக்கைகள் (மதச்சார்பானவர் அல்லது நாத்திகர் போன்றவை), பாலியல் நோக்குநிலை அல்லது சட்டம்சார் வரலாறு போன்ற முக்கியமான தனிப்பட்ட தகவல்களைத் தொடர்புகொள்வதை நோக்கமாகக் கொண்டதல்ல. SpeakUp® பயன்படுத்தும் போது இதைக் கருத்தில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

வயதுக்கு வராதோர்

நீங்கள் உரிமை வயதை எட்டாதவர் எனில், சட்டரீதியாகத் தேவைப்படுமிடத்து, நீங்கள் SpeakUp® ஐப் பயன்படுத்துவதற்கு உங்கள் நிறுவனமானது உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

இது எவ்வாறு செயற்படுகின்றது

SpeakUp® ஊடாக விடப்பட்ட புகாருக்கு என்ன நடக்கும்?

புகாரின் உள்ளடக்கமானது உங்கள் நிறுவனத்துடன் பகிரப்பட்டு, உங்கள் நிறுவனத்தால் SpeakUp® என்ன நோக்கங்களிற்காகச் செயற்படுத்தப்படுகின்றதோ அவற்றுக்காக மட்டுமே பயன்படுத்தவும் செயற்படுத்தவும் படும். புகார்கள் எப்போதும் எழுத்து வடிவில் உங்கள் நிறுவனத்துடன் பகிரப்படும். ஒலிப்பதிவுப் புகார்கள் பகிரப்படுவதற்குமுன் படியெடுக்கப்பட்டு அதன்பின் ஒலிக் கோப்பானது தானாகவே அழிக்கப்பட்டுவிடும். SpeakUp®-க்கான மின்னஞ்சல் அறிவிப்புகளை அல்லது தானியங்கி அறிவிப்புகளை நீங்கள் இயக்க முடியும். உங்கள் சாதன அமைப்புகள் மூலம் எப்போது வேண்டுமானாலும் SpeakUp® கைபேசிச் செயலிக்கான தானியங்கி அறிவிப்புகளை முடக்கலாம். SpeakUp® மூலம் விடப்படும் புகாருக்கு என்ன நடக்கும் என்பது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, உங்கள் நிறுவனத்தின் SpeakUp கொள்கை மற்றும்/அல்லது தனியுரிமைக் கொள்கையைப் பார்க்கவும்.

அநாமதேயம்

SpeakUp® ஊடாக புகாரொன்றை வெளியிடும் போது, நீங்கள் உங்கள் அடையாளத்தை உங்கள் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்வதற்கு அல்லது உங்கள் பெயரை குறிப்பிடாமல் இருப்பதற்குத் தீர்மானிக்கலாம். உங்கள் புகாரில் தனிப்பட்ட விவரங்களை நீங்கள் பகிர்ந்தால், உங்கள் புகாரைக் கையாளும்போது இவை உங்கள் நிறுவனத்தால் செயன்முறைப்படுத்தப்படும்.

SpeakUp®-ஐப் பயன்படுத்தும்போது தனிப்பட்ட தரவு ஏன் செயலாக்கப்படுகிறது?

SpeakUp® ஊடாக தனிப்பட்ட தரவைச் செயன்முறைப்படுத்துவது பின்வருவானவற்றிற்காக அவசியமாகின்றது:

எந்தத் தரவு செயன்முறைப்படுத்தப்படும்?

நீங்கள் SpeakUp® ஐப் பயன்படுத்தும்போது வழங்கிய சில தரவுகள் தானாகவே சேகரிக்கப்படும். இவை உங்கள் நிறுவனத்துடன் பகிரப்பட மாட்டாது. SpeakUp®-ன் அனைத்துச் செயல்பாடுகளையும் உங்களுக்கு வழங்குவதற்காகவும், சான்றுறுதி நோக்கங்களுக்காகவும், அறிவிப்பு நோக்கங்களுக்காகவும் (இயக்கப்பட்டிருந்தால்; உ.ம். உங்கள் மின்னஞ்சல் முகவரி), உங்கள் சாதனத்துடன் ஒரு பாதுகாப்பான இணைப்பை நிறுவவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அல்லது பிற தீங்கான நடவடிக்கைகளைத் தடுக்க மற்றும் கண்டறிய இந்தத் தரவுகள் செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் தகவல் வேறு எந்த நோக்கத்திற்காகவும் பயன்படுத்தப்பட மாட்டாது. தீங்கிழைக்கும் செயற்பாட்டின் நிறுவப்பட்ட செயலின் காரணமாக இந்தக் கால அளவு நீட்டிக்கப்படாவிட்டால், கருதப்பட்ட நோக்கத்திற்காகத் தேவைப்படும் வரை மட்டுமே இந்தத் தகவல் சேமிக்கப்படும்.

தரவு பாதுகாப்பு

People Intouch ஆனது உங்கள் தனிப்பட்ட தரவை இழத்தல், தவறாகப் பயன்படுத்துதல் அல்லது மாற்றுதல் என்பவற்றைத் தவிர்ப்பதற்கு விரிவான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. SpeakUp® இணையம் மற்றும் SpeakUp® கைபேசிச் செயலி மூலம் தரவு அனுப்பப்படும்போது எல்லா தரவுகளும் குறியாக்கம் செய்யப்படுகின்றன. 

குக்கீகள்

SpeakUp® இணையத்தைப் பார்வையிடும்போது, ​​பாதுகாப்பான தொடர்பாடலை வழங்குவதற்காக அமர்வு குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அமர்வு குக்கீ தரவு இரண்டு (2) மணித்தியாலங்களுக்குப் பிறகு நீக்கப்படும். குக்கீகளை நீக்குவதற்கு, முடக்குவதற்கு அல்லது தடுப்பதற்கு உங்கள் உலாவி அமைப்புகளைப் பயன்படுத்தலாம்.

திருத்தங்கள்

People Intouch ஆனது சாத்தியமான சிறந்த முறையில் உங்களுக்குத் தகவல் அளிக்க விரும்புகிறது. மேலும், இந்த தனியுரிமை அறிக்கை அவ்வப்போது திருத்தப்படவும் மாற்றப்படவும் கூடும்.

உங்களுடைய உரிமைகள் எவை?

உங்கள் நிறுவனமானது உங்களுடைய தனிப்பட்ட தரவைச் செயன்முறைப்படுத்துவதற்கும், பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைப் பின்பற்றி உங்கள் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் பொறுப்பாகும். உங்கள் நிறுவனம் தனிப்பட்ட தரவுகளைச் செயல்படுத்துவது குறித்தும் உங்கள் தரவு பாதுகாப்பு உரிமைகள் குறித்தும் கூடுதல் விபரங்களுக்கு தயவுசெய்து உங்கள் நிறுவனத்தின் SpeakUp கொள்கை மற்றும்/அல்லது தனியுரிமைக் கொள்கையைப் பாருங்கள்.

இறுதியாக 12 ஜூலை 2022 அன்று திருத்தப்பட்டது

***